திரையுலகம்,முதன்மை செய்திகள் கவர்ச்சி நடிகையின் சைடு பிசினஸ் …

கவர்ச்சி நடிகையின் சைடு பிசினஸ் …

கவர்ச்சி நடிகையின் சைடு பிசினஸ் … post thumbnail image
ஜாக்பாட் இந்தி படத்தில் பரத்துடன் நடித்திருந்தார் ஆபாச புயல் சன்னி லியோன். படப்பிடிப்பு நடந்தபோதே சர்ச்சைகளில் சிக்கிய அப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியிருந்தது. ஆனால், இப்போது வெளியான ஒரே வாரத்தில் தியேட்டர்களை விட்டு தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறதாம். இருப்பினும் அடுத்தடுத்து இந்தியில் கைமேல் படங்கள் இருப்பதால் புதிய படங்களில் முழுவீச்சில் ஈடுபட்டிருக்கிறார் சன்னி.

இதையடுத்து டினர் அண்ட் லூலு என்ற பெயரில் சன்னி நடித்த ஆக்சன் படமொன்று விரைவில் திரைக்கு வர இருக்கிறதாம். இந்த படத்தில் பாக்சிங் சாம்பியனாக நடித்துள்ள சன்னி, இந்த படத்துக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று பிரபல பாக்சிங் சாம்பியன் டெர்ரி நோரிஸி என்பவரிடம் முறையாக பயிற்சி எடுத்து நடித்துள்ளாராம்.மேலும், இந்த பயிற்சிக்காக சென்றபோது, பாக்சிங் மீது சன்னிக்கான ஈடுபாடு அதிகரித்து விட்டதாம்.

அதனால், இந்த கலையை நாமும் மற்றவர்களுக்கு பயிற்சி கொடுத்து இன்னொரு ரூட்டிலும் சம்பாதிக்கலாமே என்று, அதற்கான முன்அனுபவத்தை பெறும் நோக்கில் தற்போது தனக்கு பயிற்சி கொடுத்தவருடன் சேர்ந்து தொழில் பார்ட்னராகியிருக்கிறாராம் சன்னிலியோன்.எதிர்காலத்தில் தனக்கு பரிட்சயமான உலகின் பல பகுதிகளில் பிரமாண்டமான பாக்சிங் ஜிம் அமைத்து சைடு பிஸினசை முடுக்கி விட வேண்டும் என சன்னி லியோன் முடிவெதுத்து உள்ளார் .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி