கடந்த 17.10.1997 அன்று இந்த மாணவி பள்ளிக்கூடம் செல்வதற்காக இ.பி.காலனி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது சேதுராமன் அங்கு வந்தார். அவர் அந்த மாணவியிடம் ‘நான் உன்னை பள்ளியில் கொண்டு சென்று விடுகிறேன்‘ என்று கூறியதுடன், அவரை கட்டாயப்படுத்தி தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றார்.அந்த மாணவியை பள்ளியில் கொண்டு விடாமல் வாடிப்பட்டியை அடுத்த குட்லாடம்பட்டி மலைக்கு கொண்டு சென்றார். மலையின் உச்சியில் வைத்து அந்த மாணவியை வன்புணர்ந்தார். அவரிடம் இருந்து தப்பித்த அந்த மாணவி மலை அடிவாரத்தில் இருந்த கடையில் தஞ்சம் புகுந்தார். பின்னர் அந்த கடைக்காரர்களின் உதவியுடன் அவர் தனது பெற்றோரிடம் வந்து சேர்ந்தார்.
பின்னர் மலையில் நடந்த விவரங்களை தனது பெற்றோரிடம் அவர் தெரிவித்தார். அதன்பின் இதுகுறித்து ஊமச்சிகுளம் காவல்நிலையத்தில் மாணவின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சேதுராமனை கைது செய்தனர்.இந்த வழக்கு மதுரை மாவட்ட 3 வது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சேதுராமன் என்ற ராமநாதனுக்கு ஆயுள்தண்டனை வழங்கி நீதிபதி சி.குமரப்பன் உத்தரவிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி