முதன்மை செய்திகள்,விளையாட்டு விராட்கோலி முன்னேற்றம்…டிவில்லியர்ஸ்,பிலாண்டர் முதலிடம்…

விராட்கோலி முன்னேற்றம்…டிவில்லியர்ஸ்,பிலாண்டர் முதலிடம்…

விராட்கோலி முன்னேற்றம்…டிவில்லியர்ஸ்,பிலாண்டர் முதலிடம்… post thumbnail image
டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தர வரிசையில் இந்திய வீரர் விராட்கோலி 9 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 11–வது இடத்தை பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்க வீரர்கள் அம்லா பேட்டிங், ஸ்டெயின் பந்து வீச்சாளறும் முதலிடத்தை இழந்தனர்.

டிவில்லியர்ஸ் முதலிடம்

இந்தியாவுக்கு எதிரான ஜோகனஸ்பர்க்கில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ், பேட்டிங் தர வரிசையில் சக வீரர் ஹசிம் அம்லாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார். அம்லா 2–வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்திய வீரர்களில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்த புஜாரா 7–வது இடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 119, 96 ரன்கள் எடுத்த இந்திய வீரர் விராட்கோலி 9 இடங்கள் முன்னேறி 11–வது இடத்தை பிடித்துள்ளார்.

பந்து வீச்சில் பிலாண்டர் முதலிடம்

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் அபாரமாக பந்து வீசிய தென் ஆப்பிரிக்க வீரர் பிலாண்டர் பந்து வீச்சு தர வரிசையில் முதலிடத்தில் நீண்ட காலமாக இருந்த சக வீரர் ஸ்டெயினை சாய்த்து விட்டு முதலிடத்தை முதல்முறையாக பிடித்துள்ளார். ஸ்டெயின் 2009–ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் முதல் இடத்தில் இருந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வீரர் அஸ்வின் 7–வது இடத்திலும் ஓஜா 8–வது இடத்திலும் இருக்கின்றனர்.

ஆல்–ரவுண்டர்கள் வரிசையில் இந்திய வீரர் அஸ்வின் முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் தர வரிசையில் தென் ஆப்பிரிக்க அணி முதலிடத்திலும், இந்திய அணி 2–வது இடத்திலும் உள்ளன. ஒருநாள் போட்டியில் இந்தியா முதலிடத்திலும், 20 ஓவர் போட்டியில் இலங்கை முதலிடத்திலும், இந்தியா 2–வது இடத்திலும் உள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி