செய்திகள்,முதன்மை செய்திகள் ராட்சத சவக்குழியும்… மண்டை ஓடுகளும்….

ராட்சத சவக்குழியும்… மண்டை ஓடுகளும்….

ராட்சத சவக்குழியும்… மண்டை ஓடுகளும்…. post thumbnail image

சவக்குழியில் சோதனை:-

இலங்கையில், ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சண்டை, 4 ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்தது. அந்த போரின்போது, ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடந்தன. அதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அச்சமயத்தில், ஏராளமான தமிழர்கள் காணாமல் போய் விட்டனர் என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டு வருகிறது. அவர்களை இலங்கை ராணுவம் கொலை செய்து, ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் புதைத்து இருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது.

சிக்கிய மண்டை ஓடுகள்:

இந்த சூழ்நிலையில், தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிழக்கு மாகாணத்தில் உள்ள மன்னாரில் கடந்த மனித மண்டை ஓடுகள் சிக்கின. தேசிய குடிநீர் வினியோகம் மற்றும் கழிவுநீர் வாரிய ஊழியர்கள், மன்னாரில் ஒரு இடத்தில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையை தோண்டினார்கள்.

அப்போது, 6 மண்டை ஓடுகள் சிக்கின. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று அதே இடத்தில் மேலும் 4 மனித மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

இன்று விசாரணை நடத்த முடிவு:-

எனவே, அந்த இடத்தில் ஏராளமான உடல்களை போட்டு புதைத்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ராட்சத சவக்குழியாக கருதப்படும் அங்கு இன்று மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்துள்ளது.

இதுபோன்ற ஒரு சவக்குழி, மாத்தளை பகுதியில் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த உடல்கள், தங்கள் இயக்கத்தினரின் உடல்கள் என்று மார்க்சிஸ்ட் அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனா கூறியது.

கடந்த 1987–ம் ஆண்டில் இருந்து 1990–ம் ஆண்டுவரை, அந்த இயக்கத்தினரை இலங்கை ராணுவம் அழித்து ஒழித்தது. அந்த சமயத்தில் கொல்லப்பட்ட ஜனதா விமுக்தி பெரமுனா இயக்கத்தினரின் உடல்களாக அவை இருக்கலாம் என்று கருதப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி