திரையுலகம்,முதன்மை செய்திகள் இளையராஜாவுக்கு ஆஞ்சியோ ஆப்பரேஷன்…

இளையராஜாவுக்கு ஆஞ்சியோ ஆப்பரேஷன்…

இளையராஜாவுக்கு ஆஞ்சியோ ஆப்பரேஷன்… post thumbnail image

இசைஞானி இளையராஜா உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவிற்கு வந்தார். புதிய படத்திற்கான பாடல் இசையமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

டிசம்பர் 28ம் தேதி நடைபெற உள்ள விழாவிற்காக பாடல் கம்போசிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விரைவில் இளையராஜாவிற்கு ஆஞ்சியோ ஆப்பரேஷன் நடைபெற உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இது பல நாட்களுக்கு முன்னரே செய்யப்பட வேண்டியது எனவும் டாக்டர்கள் கூறினார் .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி