நியூசிலாந்தின் வாய்கடோ பகுதியைச் சேர்ந்தவர் கிம் ஆலன்(வயது 47).நான்கு குழந்தைகளின் தாயான ஆலன், கடந்த அவர் கடந்த 19ம் திகதி காலை 6 மணிக்கு ஆக்லேண்டில் இருந்து ஓடத் துவங்கினார்.அவர் தொடர்ந்து 86 மணிநேரம் தூங்காமல் ஓடி நேற்றிரவு 8.35 மணிக்கு 500 கிமீ தூரத்தை கடந்துள்ளார்.
இதன் மூலம் தூங்காமல் அதிக தூரம் ஓடிய பெண் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.இதற்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த பாம் ரீட் என்ற பெண் கடந்த 2005ம் ஆண்டில் 80 மணிநேரத்தில் 486 கிமீ ஓடியது தான் உலக சாதனையாக இருந்தது.நல்ல காரியம் ஒன்றிற்காக நிதி திரட்டவே கிம் தூங்காமல் ஓடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி