ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு வந்தார். நளன்குளத்தில் நீராடிய அவர், ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர், ஸ்ரீ பிரணாம்பிகை சன்னதிகளில் வழிபாடு செய்தார். அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ சனீஸ்வர பகவான் சன்னதி அருகே நடைபெற்ற நவகிரஹ ஹோமத்தில் கலந்து கொண்ட பின்னர் ஸ்ரீ சனீஸ்வர பகவானை வழிபட்டார். பின்னர் 4 மணியளவில் கோயிலிலிருந்து வெளியே வந்தார்.
யாரும் தன்னை அடையாளம் கண்டு கொள்ள கூடாது என்று விஜய் தலையில் குல்லா அணிந்து கொண்டார். அவரின் வருகை, ஹோமம் நடத்திய சிவாச்சாரியார் தவிர யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.
திருநள்ளாறு கோயில் சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 6 மணிக்கும், சனிக்கிழமை என்று காலை 4 மணிக்கும் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் விஜய் வருகைக்காக அதிகாலை 3 மணிக்கு முன்னதாக கோயில் திறக்கப்பட்டது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.ஆகம விதிகளுக்கு முரணாக கோயில் நிர்வாகம் செயல்படுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பக்தர்கள் புகார் குறித்து, நிர்வாக அதிகாரி “விஜய் வருகைக்காக சனிக்கிழமை முன்னதாகவே கோவில் நடை திறக்கப்பட்டது உண்மைதான்.
முக்கிய பிரமுகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல் தரிசனம் செய்ய விரும்பினால் அதற்கான கட்டணத்தை கோயில் நிர்வாகத்திடம் செலுத்திவிட்டு தரிசனம் செய்யலாம். அதன் அடிப்படையில் நடை திறப்பு முன்னதாக செய்யப்பட்டது. “என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி