செய்திகள்,முதன்மை செய்திகள் கள்ளத்தொடர்பை கண்டித்த மாமனார் படுகொலை …

கள்ளத்தொடர்பை கண்டித்த மாமனார் படுகொலை …

கள்ளத்தொடர்பை கண்டித்த மாமனார் படுகொலை … post thumbnail image
உத்தரபிரதேசத்தின் சம்பல் நகரம் அருகேயுள்ள ஷிவாலி என்ற கிராமத்தை சேர்ந்தவர், பவ்னேஷ் ஷர்மா(65). இவரது மகனின் இளம் வயது மனைவிக்கு அதே கிராமத்தை சேர்ந்த இன்னொரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருப்பது இவருக்கு தெரியவந்தது.இதனையடுத்து, குடும்ப மானமும், கவுரவமும் சீர்குலந்துப் போய்விடுமே… என்று கவலைப்பட்ட அவர், இவ்விவகாரம் தொடர்பாக மகனுக்கே கூட தெரியாமல் மருமகளை அழைத்து கண்டித்தார்.

இந்த கள்ளத்தொடர்பை நீ இனியும் தொடர்ந்தால், உனது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படும்’ எனவும் அவர் அந்த பெண்ணுக்கு நல்ல விதமாக அறிவுரை கூறினார். இதை ஏற்றுக்கொள்ளவும், கள்ளக்காதலனை விட்டுவிடவும் விரும்பாத அந்த பெண், தனது உல்லாசத்துக்கு இடையூறாக இருக்கும் மாமனாரை தீர்த்துக் கட்ட கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார்.

இதனையடுத்து, அந்த பெண்ணின் கள்ளக்காதலன் ராஜேந்திர சிங், தனது நண்பர்களுடன் சேர்ந்து பவ்னேஷ் ஷர்மாவை அடித்து துவைத்து எடுத்தார். இதிலும் வெறி தணியாததால், உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் குற்றுயிரும், குறை உயிருமாக மயங்கி விழுந்து கிடந்த பவ்னேஷ் ஷர்மாவின் மீது வேனை ஏற்றிக் கொன்றார்.அப்பகுதி மக்களுக்கு இவ்விவகாரம் தெரிய வந்ததையடுத்து, ராஜேந்திர சிங் மற்றும் அவருடன் சேர்ந்து இந்த படுகொலையை செய்த அவரது 4 நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி