திரையுலகம்,முதன்மை செய்திகள் கலாய் நடிகருக்கே கலாய்யா…

கலாய் நடிகருக்கே கலாய்யா…

கலாய் நடிகருக்கே கலாய்யா… post thumbnail image

தமிழ் சினிமாவின் தற்போதைய கலாய் நடிகர் அவரையே கலாய்க்கிறாராம் அந்த பிரபல நடிகை. உடன் நடிக்கும் ஹீரோக்களை கலாய்ப்பதோடு மட்டுமல்லாமல் சினிமா விழா மேடைகளில் யாராவது ஹீரோக்கள் சிக்கினாலும் அவர்களையும் கலாய்த்து விடுகிறார்.

இப்படி நடிகர்களை கலாய்க்கும் அவர் சில நடிகைகளையும் விட்டுவைக்கவில்லை அவர்களையும் கலாய்க்கிறார். குறிப்பாக, ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்தபோது, படம் முழுக்க உதயநிதி-ஹன்சிகா இருவரையும் சீன் பை சீன் கலாய்த்தபடி நடித்திருந்தாராம் . ஆனால் பதிலடி கொடுக்கும வகையில், டேக் முடிந்ததும் அவருக்கு பதிலுக்கு சரியாக கலாய்த்து எடுத்து வந்தாராம் ஹன்சிகா. இதனால் ஒருகட்டத்தில் ஹன்சிகாவைக்கண்டாலே பயந்து ஓட்டம் பிடித்தார் அந்த நடிகர்.

அதேபோல், . ராஜாராணி படத்தில் நடித்தபோதே அவருடன் நெருக்கமாகி விட்ட நயன்தாரா, பேச்சுவார்த்தையின் விளைவு, ஒருகட்டத்தில், கலாய்ப்பு பாணி நயனையும் ஒட்டிக்கொண்டதாம்.

அவ்வப்போது அந்த நடிகருக்கு பதில் கொடுத்து பேசி வந்த நயன்தாரா, பின்னர், நேரம் போகவில்லை என்றால் போன் போட்டு அவரை கலாய்க்கிற அளவுக்கு தேறி விட்டாராம். இதனால், ஊரையெல்லாம் நான் கலாய்க்கிறேன் ஆனா, இந்த பொண்ணுங்க போட்டி போட்டு என்னையே கலாய்க்குதுங்க என்று ஹன்சிகா-நயன்தாரா மீது புகார் சொல்லிக்கொண்டு திரிகிறார் சந்தானம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி