இதற்கு நேர் மாறாக, தற்போது வெங்காயத்தின் விலை கடுமையாக குறைந்துள்ளது. இதுவும் மத்திய அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வெங்காய விலை குறைந்து, விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அதை எப்படி சமாளிப்பது என மத்திய அரசு குழம்பி உள்ளது.
கடந்த மாதம் ஏற்பட்ட விலை ஏற்றம் புதியதல்ல; இந்த தட்டுப்பாடு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மற்றம் நவம்பர் மாத்தில் ஏற்படக் கூடியது தான்; இதற்கு முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால் அக்டோபர் மாதத்திலேயே நிலைமை சீராக துவங்கி இருக்கும்; கோடை காலத்தில் பயிடுவதற்காக வெங்காயம் சேமித்து வைக்கப்படுவதால் கடந்த மாதம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; வெங்காயம் சேமித்து வைப்பதற்கான கிடங்குகளை அரசு அதிகரிக்க வேண்டும். இவ்வாறு தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி கழக துணை இயக்குனர் ஹரி பிரகாஜ் சர்மா தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி