திரையுலகம்,முதன்மை செய்திகள் மொட்டை போட்ட அஜித் குமார்…

மொட்டை போட்ட அஜித் குமார்…

மொட்டை போட்ட அஜித் குமார்… post thumbnail image
மங்காத்தா, ஆரம்பம் போன்ற ஆக்சன் படங்களில் நடித்தவர் அல்டிமேட்ஸ்டார் அஜீத்குமார். அவர் தலைமுடிக்கு டை அடிக்காமல் கறுப்பு வெள்ளை நிற முடியுடன் யதார்த்தமான தோற்றத்தில் நடித்தார்.

இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் வீரம் படத்திலும் கறுப்பு வெள்ளை முடியுடன் நடித்திருக்கிறார். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இதன் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்தது. இப்படம் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி இருந்த அஜீத், சிவா இருவரும் நேற்று திருப்பதி கோயிலுக்கு சென்றனர். இருவரும் மொட்டை அடித்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மொட்டை தலையுடன் அஜீத் படத்தில் நடிக்கிறாரா? என்ற போது அப்படி எந்த காட்சியும் இல்லை, வேண்டுதலுக்காகவே அவர் மொட்டை போட்டார் என்று இயக்குனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி