திரையுலகம்,முதன்மை செய்திகள் காமெடி பீசாகும் கடவுள்…

காமெடி பீசாகும் கடவுள்…

காமெடி பீசாகும் கடவுள்… post thumbnail image
இந்தியா இந்துக்கள் அதிகமாக வாழும் நாடு .மத ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் உயரிய மதிப்பு கொடுத்துள்ள நாடு. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சராசரி இந்துவும் மற்ற மதத்தினரோடு சகோதரத்துவமாக பழகியும், வாழ்ந்தும் வருகிறார்கள்.

இந்து மதமானது புராணங்கள் ,உபனசியங்கள் ,கதைகள் மற்றும் அவரவர் விருப்பமான கடவுள் என பல வழிகளில் மக்களை இணைக்கிறது. பிறகு கால மாற்றம் ஏற்பட கருப்பு வெள்ளை திரைபடங்கள் காலம் முதல் கலர் படம் வரை பல தெய்வீகமான திரைப்படங்கள் உருவாகின.முன்பெல்லாம் திரையரங்கில் பக்தி பாடல்கள் வந்தால் ரசிகர்கள் பரவசத்தில் சாமியாடுவார்கள்.

ஆனால் தற்போது பல படங்களில் தெய்வங்களை காமெடியாக காட்டுகிறார்கள். இப்போது திரைஅரங்குகளில் ஓடி கொண்டிருக்கும் ‘நவீன சரஸ்வதி சபதம்’ திரைபடத்தில் இந்து தெய்வங்களை காமெடியாக காட்டியுள்ளார்கள்.பிற மத கடவுள்களை கிண்டல் செய்தால் போராட்டம் செய்கிறார்.

ஆனால் இந்து கடவுளை கிண்டல் செய்தால் யாரும் எதுவும் செய்வதில்லை.ஒரு மதம் வாழ்வது அதனை பின்பற்றுபவர் கையில் உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி