பிரம்மன் விஷ்ணு இவர்கள் இருவருக்கும் யார் பெரியவர் என்ற போட்டி கடும் மோதலை உருவாக்கியது .அவர்கள், இருவரின் நிலையை உணர்ந்த ஈசன் மலையாக தோன்றி மலையின் அடியேனும் இல்லை முடியெனும் காண்கின்றவர் தான் பெரியவர் என்றார்.
மலையின் உச்சியை கண்டுபிடிக்க அன்னபறவை அவதாரம் எடுத்து வான் நோக்கி சென்றார் பிரம்மன், அடியை காண வராக அவதாரம் எடுத்தார் விஷ்ணு , அன்னபறவை கடைசி வரை முடியை பார்க்கமுடியவில்லை, அதே நேரம் வரகம் பூமியை தோண்டி பார்த்து அடியையும் பார்க்கமுடியாமல் தன் தவறை உணர்ந்து திரும்பியது, ஆனால், அன்னபறவை அவதாரம் எடுத்த பிரம்மன் திரும்பி வரும் வழியில் ஒரு தாழம்பூவை கண்டார், தாழம்பூ தான் ஈசனின் தலையில் இருந்து விழுந்ததாகவும் பல கோடி வருடங்களாக அவரின் அடியை தேடி போவதாகவும் கூறியது.
பிரம்மன் தாழம்பூவிடம் தான் ஈசனின் முடியை கண்டுவிட்டதாக பொய் சொல்ல சொன்னான், இருவரும் அப்படியே கூறினார்கள், அனைத்தும் அறிந்த ஈசன் படைக்கும் கடவுளாக இருந்தாலும் உனகென்று தனியாக கோவில் கிடையாது, தாழம்பூவாகிய நி பூஜைக்கு உத்வமட்டை என்று சபித்தார்,
அவர்கள் தவறை உணர்ந்து வேண்ட கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் ஜோதியாக திருவண்ணமலையில் காட்சியளிக்கிறார் அய்யன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி