அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ஒரு கிலோ உப்பு ருபாய் 300…

ஒரு கிலோ உப்பு ருபாய் 300…

ஒரு கிலோ உப்பு ருபாய் 300… post thumbnail image

உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரப்புவோர் மீதும் பதுக்குவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநில அரசுகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

மேற்கு வங்காளம், பீகார், மேகாலயம், மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சில மாவட்டங்களில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியதால் ஒரு கிலோ உப்பு 300 ருபாய் வரை விற்கப்பட்டது.

இது தொடர்பாக 21 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு வதந்தி பரப்பியதாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து போதுமான உப்பு கையிருப்பு இருபதாகவும் வதந்தியை நம்பவேண்டாம் என்றும் அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி