திரையுலகம் விஜய் ரசிகர்களை கடுப்பேற்றிய முருகதாஸ்

விஜய் ரசிகர்களை கடுப்பேற்றிய முருகதாஸ்

Tamil Movie Star Vijay in Thuppaki Tamil movie

காணொளி:-

இளையதளபதி விஜய்யின் பிறந்த நாள் வரும் ஜூன் 22-ம் தேதி வருகிறது, நிச்சயம் துப்பாக்கி படத்தின்ட்ரைலர் அன்று வெளியிடப்பட்டு விஜய்யின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடியம் என்று நினைத்து கொண்டிருந்த அவரது ரசிகர்களின் ஆசைக்கு படத்தின் இயக்குனர் முருகதாஸ் ஆப்பு வைத்துவிட்டார் விஜய்யின் பிறந்த நாளுக்கு 10 நாட்கள் கழித்து தான் ட்ரைலர் வெளியாகும் என்று தெரிகிறது.விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் விஜய்யின் துப்பாக்கி படத்தின் ட்ரைலர் காட்சி வரும் ஜூலை 1-ம் தேதி தான் வெளியாகிறது.

விஜய், காஜல் அகர்வால் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படம் தான் துப்பாக்கி, இந்த படத்தை தயாரிப்பவர் கலைப்புலி தாணு. இந்தப் படம் விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யுடன் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறிப்போய்யுள்ளது. படத்தின் ஒரு போஸ்டர் மட் டும் தான் வெளியாகியுள்ளது. எனவே படத்தின் முன்னோட்டக் காட்சியான ட்ரைலரை விஜய் பிறந்த நாளன்று வெளியிடக் கோரி வந்தனர். அவர்கள் நச்சரிப்பு தாங்க முடியாமல் முருகதாஸ் தனது ட்விட்டரில், “வரும் 22-ம் தேதி பெரிய படங்களெல்லாம் வெளியாகின்றன. அன்று துப்பாக்கி ட்ரைலர் வெளியிடுவது முடியாது. 10 நாட்களில் வெளியிட்டுவிடுவோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யின் பிறந்தநாளுக்கு வெளிவரும் என்று எதிர்பார்த்த பில்லா -2 வும் எந்த தேதியில் வெளிவர போகிறது என்பது கேள்வி குறியாய் இருக்கிறது.[rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.