திரையுலகம்,முதன்மை செய்திகள் என்னது தல அஜீத்தின் பில்லா – 2 ஒரு “A” படமா

என்னது தல அஜீத்தின் பில்லா – 2 ஒரு “A” படமா

Tamil Star Ajith in Billa-2 Tamil movie

காணொளி:-

தல அஜீத் நடித்த பில்லா 2 படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போய்விட்டது யாவரும் அறிந்ததே. நேற்று கூட இனியதமிழில் இதை பற்றி செய்தி வெளியிட்டு இருந்தோம். இப்போது அடுத்த பிரச்சனை வந்துள்ளது.

இந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் தல படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. கடும் அதிர்ச்சிக்கு ஆளான படக்குழுவினர் படத்திற்கு ‘யூ/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரி படத்தை மும்பையில் உள்ள மேல் முறையீட்டு குழுவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

என்ன பிரச்சனை என்றால் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தால் அந்த படத்தை வயதுக்கு வந்தோர் மட்டும் அதாவது 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பார்க்கமுடியும். யூ/ஏ சான்றிதழ் கிடைத்தால் 12 வயதுக்கு மேற்பட்டோரிலிருந்து இந்த படத்தை பார்க்கலாம்.

இந்த திரைபடத்தில் தல இலங்கை அகதியாக – தாதாவாக நடிக்கிறார், பார்வதி ஓமனகுட்டன் கதாநாயகியாக நடித்துள்ளார்.படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்,படத்தின் பாடல்கள் எல்லாம் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டன.

இந்த படத்தை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். இப்படத்தில் வன்முறை மற்றும் கவர்ச்சி காட்சிகள் அதிகம் இருந்ததால் தணிக்கை குழுவினர் அவற்றை நீக்க முடிவு செய்தனர் இயக்குனர் சக்ரி டோலட்டி இதற்கு சம்மதிக்கவில்லை.

இதனால் தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் தான் படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் கடைசி வாரத்துக்கு தள்ளிப் போயிருக்கிறது.[rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.