எப்பொழுதுமே ஒரு படத்தின் கதாநாயகனுக்கும்,கதாநாயகிக்கும் தான் கெமிஸ்ட்ரி, வேலைக்கு ஆகும். ஆனால் இயக்குநர் ராஜேஷுக்கும், காமெடியன் சந்தானத்துக்கும் கூட இது கரெக்டாகப் பொருந்தி வருகிறது போல. அதனால்தான் இருவரும் தொடர்ச்சியாக நான்காவது முறையாக இணைந்து பணியாற்றப் போகிறார்கள்.
இந்த இருவரும் முதன் முதலில் சேர்ந்து கொடுத்த படம் சிவா மனசுல சக்தி. தொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பட்டையைக் கிளப்பினர். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திலும் ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் உதயநிதியுடன் இணைந்து நடித்தார். தற்போது நான்காவது முறையாக இணையவுள்ளார்.
இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பவர் கார்த்தி. படத்திற்குப் பெயர் அழகு ராஜாவாம் அப்படியா….? ஏற்கனவே கார்த்தியுடன் சிறுத்தையில் பின்னி பெடலெடுத்தவர்தான் சந்தானம். எனவே இந்த மூன்று பேரும் சேர்ந்து பணியாற்றவுள்ளதால் மறுபடியும் ஒரு காமெடி கொண்டாட்டமாக தியேட்டர்கள் அதிர போகின்றன.
ஆனால் படப்பிடிப்பு இப்போதைக்கு இல்லையாம், இன்னும் கொஞ்சம் தாமதமாகுமாம்….வயறு குலுங்க சிரிக்க காத்திருங்கள்…
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி