திரையுலகம் வேட்டை ஆர்யாவின் அடுத்த வேட்டை ஆரம்பம்

வேட்டை ஆர்யாவின் அடுத்த வேட்டை ஆரம்பம்

Actress Hansika Motwani

காணொளி:-

இம்ரான் கான் நடிப்பில் இந்தியில் சூப்பர் ஹிட்டான டில்லி பெல்லி படம் இப்போது தமிழில் ரீ-மேக் ஆக இருக்கிறது.

பெயர் வைக்க படாத இந்த படத்தை வந்தான் வென்றான் டைரக்டர் கண்ணன் இயக்க, ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். வேட்டை படத்தின் வெற்றிக்கு பிறகு ஆர்யா நடிக்க போகும் படம் இது. இவருக்கு ஜோடியாக ஒரு கல் ஒரு கண்ணாடி நாயகி ஹன்சிகா நடிக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் பத்திரிக்கையாளராக அங்காடி தெரு அஞ்சலி நடிக்கிறார். இவர்களுடன் சந்தானம், பிரேம்ஜி அமரன் ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் சூட்டிங்கை ஒரே கட்டமாக இயக்க திட்டமிட்டுள்ளார் டைரக்டர் கண்ணன். இன்னும் இப்படத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை என்றும், தற்போது இரண்டு தலைப்புகளை தேர்வு செய்திருப்பதாகவும், விரைவில் அதனை அறிவிப்பதாகவும் கண்ணன் கூறியிருக்கிறார்.

இப்படத்தின் சூட்டிங் சென்னை ஏர்போர்ட் அருகே 5ஸ்டார் ஹோட்டல் மாதிரி ஒரு செட் அமைக்கப்பட்டு, காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி