திரையுலகம் ரஜினியின் ராணாவில் அசின்?

ரஜினியின் ராணாவில் அசின்?

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

அசினை எந்தத் தமிழ்ப் படத்திலும் ஒப்பந்தம் செய்யக் கூடாது என பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நடக்கிற விஷயங்கள் அந்த முழக்கத்துக்கு செவிசாய்க்கும் விதமாக இல்லை.

ர‌ஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணாவில் தீபிகா படுகோன் ஹீரோயின். இன்னொரு ஹீரோயினாக நடிக்க த்‌ரிஷா தேர்வு செய்யப்படுவார் என்பதே நேற்று வரை பேச்சாக இருந்தது. ஆனால் தற்போது இன்னொருவரும் போட்டியில் சேர்ந்திருக்கிறார். அவர் அசின்.

தீபிகாவைப் போலவே அசினும் வட மாநிலங்களில் பிரபலமானவர் என்பதால் படத்தை அங்கிட்டும் விற்கலாம் என்ற அடிப்படையில் அசினையும் லிஸ்டில் இணைத்திருக்கிறார்கள்.

பணத்துக்கு முன்னால் இனமாவது, உணர்வாவது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.