திரையுலகம் நடிப்பு மட்டும் இல்ல…கவர்ச்சியும் இங்க கிடைக்கும்…

நடிப்பு மட்டும் இல்ல…கவர்ச்சியும் இங்க கிடைக்கும்…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை அஞ்சலி அங்காடித்தெரு படம் மூலம் ஹிட் நாயகி ஆனார். அந்த படத்தை தொடர்ந்து பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அஞ்சலியிடம் கால்ஷீட் கேட்டு அணுகியும் கொடுக்க முடியாத நிலையை உருவாக்கியன அங்காடித்தெருவுக்கு முந்தைய காலகட்டத்தில் ஒப்புக் கொண்ட படங்கள்.

ஏற்கனவே கமிட் ஆகியிருந்த சின்ன பட்ஜெட் படங்கள் சிலவற்றில் நடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருந்த அஞ்சலி புதிய படங்களில் ஒப்பந்தமாகாமல் இருந்தார்.

இப்போது பழைய கமிட்மெண்ட்கள் அனைத்தையும் முடித்து விட்ட அஞ்சலி, இனி முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். அதோடு இதுவரை நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த அஞ்சலி இனிமேல் கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.