காவலன் படத்தை பார்ப்பதற்கு ரொம்ப ஆவலனாக இருக்கிறான் ரசிகன். ஆனால் நினைத்த மாதிரி திருவிழா நடத்த முடியாது போலிருக்கே என்று இப்போதிலிருந்தே கையை பிசைய ஆரம்பித்திருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு. தியேட்டர் கிடைக்கவில்லை என்ற பழைய ஸ்லோகம்தான் இதற்கு பதில்.
தமிழகத்தில் மட்டும் சுமார் 600 தியேட்டர்களை கைப்பற்றி விட வேண்டும் என்று துடியாக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுவரைக்கும் 200 தியேட்டர்கள் கூட ஒப்பந்தம் ஆகவில்லையாம். ரொம்பவே டென்ஷனோடு நடந்தது சென்சார். ஆங்காங்கே விஜய் பேசும் சில வசனங்கள் நெருப்பை கக்குகிறதாம் தனக்கு எதிரானவர்களை நோக்கி! அதே நேரத்தில் எங்கும் கத்தரி வைக்க முடியாதபடி படம் எடுத்திருக்கிறாராம் சித்திக்.
க்ளைமாக்ஸ் காட்சி அசத்தல். நாங்கள் எங்களை அறியாமல் கண் கலங்கினோம் என்றார்களாம் சென்சார் உறுப்பினர்கள். இப்போதெல்லாம் சென்சார் போர்டுல என்ன சொன்னாங்க என்றொரு கேள்வியை அடிஷனலாக கேட்டு அதையும் எழுத ஆரம்பித்திருக்கிற நிருபர்களுக்கு நாம் சொல்லியிருக்கும் இந்த துணுக்கு, பெரும் தீனியாக இருக்கலாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.