திரையுலகம் உதயநிதி ஸ்டாலினிடம் சிக்கிய ஹன்சிகா…

உதயநிதி ஸ்டாலினிடம் சிக்கிய ஹன்சிகா…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

பல மாதங்களாக இழுபறியாக இருந்த மேட்டர் இப்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு அட்வான்ஸ் கைமாறிவிட்டதால் இந்த செய்தியாவது உறுதியாக இருக்கும் என்று நம்பலாம். அதாவது ஹீரோவாகப் போகும் உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடி சேர ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டார் ஹன்சிகா மோத்வானி.

நயன்தாராவில் ஆரம்பித்து ஸ்ருதி, த்ரிஷா என்று யூகத்தின் அடிப்படையில் செய்திகள் வெளிவந்த நிலையில் ஹன்சிகாவே நான் அட்வான்ஸ் வாங்கிட்டேன் என்று அறிவிக்காத குறையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

த்ரிஷாவிடம் பேசியதெல்லாம் உண்மைதானாம். ஆனால் அவர் கேட்ட சம்பளம்தான் அம்மாடியோவ்… ரகமாம். மோதிரத்தை தரலாம். விரலோடு கேட்டால்? அப்படிதான் இருந்ததாம் அவரது டிமாண்ட். இதனால்தான் ஹன்சிகா வந்தாராம் அந்த இடத்துக்கு.

ராஜேஷ் இயக்கவிருக்கும் இந்த படத்திற்கு ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற பெயரும் இறுதி செய்யப்பட்டிருக்கிறதாம்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி