முன்னணி தொலைக்காட்சி ஒன்று ஆர்யாவை நேரலை பேட்டி ஒன்றுக்கு அழைத்தது. ஏற்கனவே சர்ச்சையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த ஆர்யாவும் ‘ஓ.கே’ சொல்ல, சேனலும் அந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தது. நேரலை நிகழ்ச்சி நடக்க உள்ள அன்று ஆர்யாவும் சேனலுக்குப் போயிருக்கிறார். அங்கு போனவர் என்ன நினைத்தாரோ ஏது நினைத்தாரோ ‘பேட்டிதர முடியாது…’ என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறிவிட்டாராம். இது சேனலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சர்ச்சையில் சிக்கிய ஆர்யா, பிரச்சனை குறித்த கேள்விகளைக் கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று மிரண்டுதான் வேகமாக வெளியேறிவிட்டார் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி