திரையுலகம் ‘மன்மதன் அம்பு’ தெலுங்கில் ‘மன்மத பாணம்’

‘மன்மதன் அம்பு’ தெலுங்கில் ‘மன்மத பாணம்’

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

விரைவில் வெளியாகவிருக்கிறது கமலின் ‘மன்மதன் அம்பு’. இந்தப் படத்தை தெலுங்கிலும் டப் செய்து வெளியிட நினைத்த நிறுவனம் ஒன்று உதயநிதியிடம் கேட்டிருக்கிறது. விளைவு, ஒரே நாளில் தமிழிலும் தெலுங்கிலும் பேசப்போகிறது ‘மன்மதன் அம்பு’. ஏற்கனவே கமலின் ‘பஞ்சதந்திரம்’, ‘தசாவதாரம்’ போன்ற படங்கள் தெலுங்கிலும் மிகப்பெரிய அளவுக்கு ஹிட்டானதால் இந்தப் படமும் அது போன்ற ஒரு வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கிறது ‘மன்மதன் அம்பு’ படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கிய நிறுவனம். தெலுங்கு டப்பிங் படத்திற்கு ‘மன்மத பாணம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி