இந்த தலைமுறை நடிகர்களில் ரஜினியும் என்னையும்போல் ஒரு நண்பர்கள் இருந்தால் காட்டுங்கள் ” என்று கமல் 50 விழாவில் கமல்ஹாசன் கூறியது நினைவு இருக்கலாம்.
அப்படி ஒருவருக்கு அன்பை பரிமாறிக் கொள்ளும் இவர்கள் சேர்ந்து நடிக்க வேண்டுமென்பதே அனைத்து ரசிகர்களும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் கமல், நானும் ரஜினியும் சேர்ந்து நடிப்பதில்லை என்று பல வருடங்களுக்கு முன்பே ஒப்பந்தம் செய்துகொண்டோம் எனக் கூறியுள்ளார்.
சமீபத்தில் மன்மதன் அம்பு படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி எந்திரன் படம் நடித்தார். இந்தியாவிலே பெரிய பட்ஜட் படமாகவும் வெற்றிப் படமாகவும் அமைந்துள்ளது. அதே போல நீங்களும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கும் திட்டமுள்ளதா.. ஏற்கெனவே இதற்காக நீங்கள் முயற்சி எடுத்ததாகக் கூறுகிறார்களே?’, என்று கேட்டனர் பத்திரிகையாளர்கள்.
இதற்கு கமல் ” நான் யாரையும் காப்பி அடிப்பதில்லை. எனக்கென்று தனித்துவம் இருக்கிறது. நடிப்பில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டால், என் குரு சிவாஜியைத்தான் நினைப்பேன். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
என்னையும், ரஜினியையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். எங்களை நாங்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை என்றும், சேர்ந்து நடிப்பதில்லை என்றும் பல வருடங்களுக்கு முன்பே ஒப்பந்தம் செய்துகொண்டோம். இளமை ஊஞ்சலாடுகிறது காலத்திலேயே இந்த முடிவை எடுத்துவிட்டோம். எங்களுக்குள் நல்ல அன்பு இருக்கிறது, நல்ல நட்பு இருக்கிறது, அது இருந்தாலே போதும்…
பட்ஜட்டுன்னு பார்த்தா, தசாவதாரம் பெரிய பட்ஜெட் படம்தான். அதேபோல் இந்த மன்மதன் அம்பும் பெரிய பட்ஜெட் படம்தான்…,”” என்றார். மேலும் இனி நீங்கள் எழுதும் கதைகளில் மட்டுமே நடிப்பீர்களா என்ற ஒரு கேள்விக்கு கமல் பதிலளிக்கையில், நல்ல கதை யார் எழுதினாலும், அதில் நான் நடிப்பேன். உங்களிடம் நல்ல கதை இருந்தால், நான் நடிக்க தயார் என்றார் கமல்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி