திரையுலகம் நிர்வாண காட்சிக்கு மன்னிப்பு

நிர்வாண காட்சிக்கு மன்னிப்பு

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

கோவாவில் சர்வதேச திரைப்படவிழாவில் இருந்து சில சுவாரஸ்யமான தகவல்கள் :-

* நிர்வாண காட்சிக்கு மன்னிப்பு கேட்ட பெண் இயக்குனர்: “சாங்ஸ் ஆப் லவ் அண்ட் ஹேட் என்ற ஸ்விட்சர்லாந்து படம், திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. படம் துவங்குவதற்கு முன், இயக்குனர் கேடலின் காட்ரோஸ், கதை பற்றி சுருக்கமாக கூறிவிட்டு, “இப்படத்தில் சில நிர்வாண காட்சிகள், சில வினாடிகள் இடம்பெறுகின்றன. இந்திய கலாசாரத்திற்கு அவை ஒவ்வாமல் இருந்தால், அதற்கு உங்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அவரது நேர்மையும் இந்திய கலாச்சாரத்தின் மீது அவருக்கும் உயர்ந்த எண்ணத்தையும் பாராட்ட வேண்டும்.

* ஹவுஸ்புல் காட்சி: “ஸ்லம் டாக் மில்லினர் படம், ஆஸ்கர் விருது பெற்றதால், உலகப் புகழ்பெற்ற இந்திய இளம் நடிகை ப்ரீடா பின்டோ நடித்திருக்கும், பிரபல ஹாலிவுட் இயக்குனர் உட்டி அலென் இயக்கிய, “யு வில் மீட் எ டால் டார்க் ஸ்ட்ரேஞ்சர் ஆங்கிலப் படம், 28ம் தேதி, பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. அதில் வரும் எட்டு முக்கிய பாத்திரங்களில் ஒன்றில், லண்டன் நகரில் வசிக்கும் இந்திய குடும்பத்து இளம் பெண்ணாக ப்ரீடா பின்டோ நடித்திருக்கிறார். அரங்கு நிறைந்து, பலர் நின்று பார்க்கும் நிலை ஏற்பட்டது. அவருடைய மீடியா சந்திப்பிலும் நிரம்பி வழிந்தது கூட்டம். மீடியா மத்தியில் பேசிய அவர், இந்தி சினிமாவில் நடிக்க விரும்பவில்லை என்று னெளியான தகவல் தவறானது என்றும், வெறும் கிளாமர் பொம்மையாக இல்லாமல் நடிக்க சவாலாக இருக்கும் படங்களில் நடிக்க விரும்புவதாவும் கூறினார். முத்தக்காட்சி குறித்து கூறுகையில், படத்தில் அந்த காட்சி தேவை என்பதால் தயக்கம் இல்லாமல் முத்தம் கொடுத்து நடித்தேன் என்றார் ப்ரீடா பின்‌டோ.

* ஸ்லம்டாக் கூட்டணி : ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஸ்லம் டாக் மில்லினர் படத்திற்காக, ஆஸ்கர் விருது பெற்ற ஒலிப்பதிவு மேதை ரசூல் பூக்குட்டி, 90 நிமிடங்கள், மாஸ்டர் கிளாஸ் என்ற புதிய நிகழ்ச்சி மூலமாக, அனைவரையும் அசத்தி விட்டார். ஸ்லம்டாக் மில்லியனர் உள்ளிட்ட சில படங்களில் இருந்து சில காட்சிகளை ஒலி இல்லாமல் ‌போட்டுக்காட்டி, பிறகு ஒலியுடன் ரீ-ரிக்கார்டிங்குடன் திரையிட்டு, அதன் வித்தியாசத்தை, ஒலியின் சக்தியை உணரச் செய்தது பிரமிப்பாக இருந்தது. ஸ்லம்டாக் கூட்டணியில் இந்த நிகழ்ச்சியும் ஹவுஸ்புல் காட்சியாக இருந்தது.

* தமிழப்படங்கள் : இந்திய பனோரமாவில் சில நல்ல படங்கள், இரண்டாம் முறையாக இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன. மணிரத்தினத்தின் ராவணன், வசந்தபாலனின் அங்காடி தெரு அவற்றில் அடங்கும்.

* எலக்ட்ராவுக்கு வரவேற்பு : கிரேக்க மொழியில் 1962ம் ஆண்டு, 110 நிமிடங்கள் படமாக எடுத்து மாபெரும் வெற்றி பெற்ற, “எலக்ட்ரா படமும், சியாம் சுந்தர் இயக்கத்தில், 2010ல் எடுக்கப்பட்ட, “எலக்ட்ரா மலையாளப் படமும் திரையிடப்பட்டது. இரண்டுக்கும் நல்ல வரவேற்பு.

* அட்டகாசமான இரான் படம்: உயிரற்ற பொருளை வைத்து, அழகாக, தரமான, நகைச்சுவையாக படம் எடுக்க முடியும் என நிரூபித்திருக்கும், இரானிய இயக்குனர் இப்ராஹீம் பெரவுஷெசை மனதாரப் பாராட்டலாம். படம் பார்த்தவர்கள் அனைவரிடமும் ஒருமித்த பாராட்டு பெற்றது, “தி பர்ஸ்ட் ஸ்டோன்!

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி