உலக திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஸ்டில் கேமராவினை பயன்படுத்தி முழு திரைப்படத்தையும் எடுத்ததற்காக லிம்கா சாதனை புத்தகத்தில் (Limca Book of Records) ‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது.
‘மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி’ என்ற படத்தை குறைந்த முதலீட்டில் தயாரித்து நிறைவான வெற்றியை பெற்ற தயாரிப்பு நிறுவனம் ‘எஸ்.பி.எஸ் மீடியா ஒர்க்ஸ்’ இந்நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் ‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி’. இப்படத்தில் உலக திரைப்பட வரலாற்றில் இதுவரை செய்திராத ஒரு சாதனையை இப்படத்தின் தயாரிப்பாளரும், ஒளிப்பதிவாளருமான எஸ்.பி.எஸ்.குகன் செய்திருக்கிறார்.
சில ஆங்கிலப்படங்களில் ஒரு சில காட்சிகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் HDSLR என்ற தொழில்நுட்பம் கொண்ட கேமராவை, இப்படம் முழுவதும் பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். உலக திரைப்பட வரலாற்றில் இந்த முறை முதல் முறையாக பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி’ திரைப்படம் “Limca Book of Records” உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சாதனை 2010ஆம் ஆண்டு வெளிவரவுள்ள லிம்கா உலக சாதனை புத்தகத்தில் வெளியாகவிருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி