திரையுலகம் “ரத்தசரித்திரம்” தியேட்டர் இல்லை, வெற்றியில் ஆர்பரிக்கும் கோடம்பாக்கம்

“ரத்தசரித்திரம்” தியேட்டர் இல்லை, வெற்றியில் ஆர்பரிக்கும் கோடம்பாக்கம்

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகவிருந்த ‘ரத்த சரித்திரம்’ படம் நவம்பர் 26ஆம் தேதி ரிலீஸ் செய்யப் போவதாக படக்குழு அறிவித்தது. ஆனால் சரியான திரையரங்குகள் கிடைக்காததால் குறித்த நேரத்தில் படம் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

‘எந்திரன்’ படம் இன்னும் ஓடிகொண்டிருக்க, ‘மைனா’ வும் தற்போது வசூலில் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில் ‘மந்திரப் புன்னகை’, ‘நகரம்’, ‘மகிழ்ச்சி’ என்று வெளியான படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் ‘நந்தலா’, ‘கனிமொழி’ ஆகியப் படங்களும் நவம்பர் 26ஆம் தேதி வெளியாகிறது. இதனால் போதிய திரையரங்குகள் கிடைக்காததால் ‘ரத்த சரித்திரம்’ படத்தின் ரிலீஸ் டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுளளது

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி