சிங்கப்பூரை சேர்ந்த சந்திரா இன்கார்பரேட் பட நிறுவனத்தின் நிர்வாக இயக்குனுர் சரவணா. இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-நடிகர் விஜய்- அசின் நடித்த காவலன் படத்தை ஏகவனூர் கிரியேஷன்ஸ் பட நிறுவன உரிமையாளர் ரொமேஷ்பாபு தயாரித்துள்ளார். டைரக்டர் சித்திக் இயக்கி உள்ளார்.வித்தியாசாகர் இசையமைத்துள்ளார். இப்ப டத்தை அடுத்த மாதம் 17-ந் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை ரொமேஷ்பாபுவிடம் இருந்து ரூ.5.50 கோடிக்கு வாங்கினேன். இதற்கான ஒப்பந்தம் 29-9-2010 அன்று போடப்பட்டது. இதுவரை நான் ரூ.1 1/2 கோடியை முன்பணமாக கொடுத்துள்ளேன்.
இந்நிலையில் காவலன் படத்தின் வெளிநாட்டு உரிமையை உரிமையாளர் ரொமேஷ்பாபு சினிமா பாரடைஸ் நிறுவன உரிமையாளர் சக்தி சிதம் பரத்துக்கு விற்றுள்ளார்.இதுபற்றி நான் சக்திசிதம்பரம் மற்றும் இப்படத்தை பிரின்ட் செய்யும் கலர் லேப்புக்கும் விளக்கம் கேட்டு கடிதம் எழுதினேன். மேலும் தயாரிப்பாளரிடம், கலர் லேப்பிடம் இருந்து வெளிநாட்டு உரிமை எனக்கு வழங்கியதற்கான கடிதம் வாங்கி தரும்படி வலியுறுத்தினேன். அதற்கு அவர் இனி என்னிடம் கலர் லேப் கடிதம் கேட்டால் வெளிநாட்டு உரிமைக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.
நான் தயாரிப்பாளரிடம் மீதி தொகையை கொடுக்கும் போது கலர்லேப் என்னிடம் காவலன் பட பிரின்டை ஒப்படைக்க வேண்டும். வேறு யாருக்கும் பிரின்ட் கொடுக்க கூடாது என ஐகோர்ட்டு தடை விதிக்க வேண்டும். வெளிநாட்டு உரிமையை வேறு யாருக்கும் கொடுப்பதற்கும், படத்தை வெளியிடவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ்வர், காவலன் படத்தை வெளியிட 6 வார காலத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தர விட்டுள்ளார். மேலும் இது குறித்து விளக்கம் அளிக்கும்படி பட தயாரிபாளர் ரொமேஷ் பாபு, விநியோகஸ்தர் சக்திசிதம்பரம், கலர் லேப் நிர்வாகி ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தர விட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி