மன்மதன் அம்பு படத்தில் த்ரிஷாவின் பெயர் அம்புஜாக்ஷி. அம்புஜா வரைக்கும் ஓ.கே! அதென்ன அம்புஜாக்ஷியோ? போகட்டும்… ஆண் குரல் நடிகைகளுக்கு மத்தியில் த்ரிஷாவுக்கு மட்டும் தேன்குரல்!
“அப்புறம் ஏம்மா டப்பிங் பேச மாட்டேங்குற?” என்று கேட்டு கிளர்ந்தெழ ஆளில்லாமல் போனதால் டப்பிங் துணையை நாடியிருந்தார் த்ரிஷா. அந்த காலம் மலையேறி போச்சு. மன்மதன் அம்பு படத்தில் இவரே சொந்த குரலில் பேசுகிறாராம். மாய்ந்து மாய்ந்து கமல் எழுதிய கவிதை ஒன்றையும் த்ரிஷாதான் பேசப் போகிறார்.
கமலுக்கு இந்த படத்தில் ஆர்.மன்னர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் கமாண்டோவாக நடித்திருக்கிறார். நட்புக்கும் காதலுக்கும் நடுவில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார் கமல்! அதாவது த்ரிஷாவுக்கும் சங்கீதாவுக்கும் நடுவில் சிக்கிக் கொண்டு.
எந்திரன் ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக ரஜினி லண்டன் போனார். கமல் சிங்கப்பூர் போயிருக்கிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை அதே நேரத்தில் சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஒளிபரப்பலாம் என்று முடிவெடுத்திருந்தார் கமல். பாழாய் போன டெக்னிக் சமாச்சாரம். அதை கெடுத்துவிட்டது. கடைசி நேரத்தில் நிகழ்ச்சி கேன்சல் ஆனதால் பார்க்க துடித்திருந்த பத்திரிகையாளர்களின் நெஞ்சோரத்தில் லேசான ஷாக்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி