திரையுலகம் அஜித்தின் `மங்காத்தா`படத்தில் அர்ஜூனின் உள்ளே வெளியே விளையாட்டு

அஜித்தின் `மங்காத்தா`படத்தில் அர்ஜூனின் உள்ளே வெளியே விளையாட்டு

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

`மங்காத்தா` படத்தில் நாகார்ஜுனா கேரக்டரில் அர்ஜூன் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வந்தன. இப்போதும் அதுவும் சிக்கலில் என்கிறார்கள் படத்துடன் தொடர்புடையவர்கள்.
தனது அடுத்தடுத்த தோல்விகளால் மனம் நொந்திருக்கும் அர்ஜுன் அடுத்துத் தான் நடிக்கும் படங்களைத் தானே இயக்கினால்தான் சரிபட்டு வரும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். இந்த நேரத்தில் அஜீத்துடன் நடிங்க என்று அழைத்தால் எப்படி ஒப்புக் கொள்வார்? அதிலும் அஜீத்தையும் சேர்த்து இதில் நாலு ஹீரோ என்கிறார்கள். இருந்தாலும் முடிவை தள்ளிப் போட்டிருக்கிறாராம் ஆக்ஷன் கிங்.
டைரக்ஷனில் மட்டுமல்ல, தான் நடிக்கும் ஷாட்டுகளில் `கிளாப்` கட்டைக்குள்கூட மூக்கை நுழைக்கும் வழக்கமுடைய அர்ஜுன், அஜீத் படத்தில் அந்த வேலையை காட்ட முடியாதல்லவா? அதனாலும் இந்த வாய்ப்பை கை கழுவ நினைக்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி