இவர் எதைத்தொட்டாலும் பொன்னாகும் என்று ஒரு சிலர் பெயரைத் தட்டிக்கொண்டு போய்விடுவார்கள்
அப்படிப்பட்ட ஒருவர் சசிகுமார். இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட எம்.சசிகுமார் இரண்டாவது முறையாக இயக்கி இருக்கும் படம்தான் ஈசன். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்தியம் தியேட்டரில் நேற்று நடந்தது.
இந்த விழாவுக்கு இந்தியாவின் முக்கிய இயக்குனர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படிருந்தார்கள். ஒரு படத்தின் இசை வெளியீடு என்றால் சினிமா நட்சத்திரங்களின் அணிவகுப்பு கட்டாயம் இருக்கும். ஆனால் இயக்குனர்களால்தான் நட்சத்திரங்கள் ஜொலிக்கிறார்கள்
என்பதை சொல்லாமல் சொல்லியது ஈசன் படத்தின் இசை வெளியீடு. மலையாளத்தில் இருந்து இயக்குனர் ரஞ்சித், பிளஸ்சி, கன்னடத்தில் இருந்து மகேஷ் பட், பாலிவுட்டில் இருந்து அனுராக் காஷ்யாப் என்று தரமான சினிமாவுக்காக தங்களை அர்ப்பணித்துகொண்ட இயக்குனர்களோடு பாலா,
அமீர் ஆகியோரும் கலந்து கொண்டு மேடையில் அமர்ந்தனர். ஆனால் தமிழ் இயக்குனர்களால் பீஸ்மர் என்று பாராட்டப்படும் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தார்.
எல்லோரையும் வரவேற்றுப் பேசிய இயக்குனர் சமுத்திரக்கனி, “ எனது ஆசான் பாலச்சந்தர் அவர்களை நானும் சசியும் இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்தோம். ஆனால் அவர் நான் பார்வையாளர் வரிசையில் அமர்ந்து உங்களை ரசிப்பேன். என்னை மேடையில் அமர வைப்பதென்றால் நான் வரமாட்டேன். அதற்கு சம்மதம் என்றால் எனக்கு சத்தியம் செய்து கொடுங்கள் என்றார்.
நாங்களும் ஒப்புகொண்டோம். அவருக்கு எங்கள் நன்றி.” என்றார். அமீர் பேச அழைக்கப்பட்டதும் “ சத்தியம் செய்வதே அதை மீறுவதற்காகத்தான். இது இயக்குனர்களின் மேடை. இதில் எங்கள் பிதாமகர் பாலச்சந்தர் இல்லையென்றால் நான் இங்கே அமர்ந்திருப்பதில் அர்த்தமில்லை.” என்று தனது பேச்சை பாதியில் நிறுத்தி விட்டு இயக்குனர் சசிகுமாரை அழைத்த அமீர் “
வாடா போய் பாலச்சந்தர் சாரை அழைத்துக் கொண்டு வருவோம்.” என்று மேடையை விட்டு இறங்கியவர் இயக்குனர் பாலச்சந்தரை அழைத்து மேடையேற்றி அவரை அனைவருக்கும் நடுவில் அமர வைத்து விட்டு தனது பேச்சை தொடர்ந்தார்.
“ இப்போ பாருங்க! இப்பத்தான் இந்த மேடை அர்த்தமுள்ளதாக இருக்கிறது.” என்று சொன்னதும் பலத்த கரகோஷம். தொடர்ந்து தனது பேச்சை தொடர்ந்த அமீர் “ பாரதிராஜா, பாக்கியராஜ், பார்த்தீபன் இவங்களெல்லாம் மேடையில பார்த்த செம டென்ஷனா இருக்கும்.
இன்னாடா இது! ஒருத்தர்லேர்ந்து ஒருத்தர், இப்படி வரிசையா வால் பிடிச்சுகிட்டு வந்துருக்காங்களேன்ணு பொறாமையா இருக்கும். நான் எல்லாம் இயக்குனரா ஆவேன்னு நினைக்கல. அப்படியே ஆனாலும் இப்படி வரிசையா ஒரு ஸ்கூல் உருவாகும்ண்ணு நினைச்சு கூட பார்க்கல. பாலா… பாலாகிட்டயிருந்து நான், எங்கிட்டே இருந்து சசிகுமார்ன்னு நினைக்கும்போது ஆச்சர்யாமா இருக்கு. பொதுவா நம்மகிட்ட இருந்தவன் பெரிய ஆளா ஆகும்போது நமக்கு ஒரு பொறாமை இருக்கும். ஆனால் நான் சசிகுமார், சமுத்திரகனிய பார்த்து பொறாமைப்பட்ட ஒரு விஷயம் அபிநயா. உங்களுடைய மிகப்பெரிய சாதனை அபிநயா. இந்திய சினிமாவில் யாரும் செய்யாத சாதனையை நீங்க செய்திருக்கிறீர்கள்.
வாய்பேசமுடியாதம் காதுகேளாத ஒரு பெண்ணை சினிமாவில் பேச வைத்திருகிறீர்கள். என்னால் கூட இதை யோசிக்க முடியவில்லை. இதற்காக ஆரோக்கியமான முறையில் உங்கள் மீது பொறாமை படுகிறேன்.
ஈசன் படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன். என்றார். பாலச்சந்தர் பேசும்போது “ என்னை மேடையில் ஏற்றியது மிகப்பெரிய துரோகம். என்றாலும் நான் பாஸ்ட் குளோரி. நீங்கள் பிரசண்ட் குளொரி. உங்களிடம் பத்து நாட்களாவது வந்து தொழில் கற்றுகொள்ள ஆசை. ஆனால் வயது ஒத்துழைக்கவில்லை. எனவே மனமாற வாழ்த்துகிறேன். என்றார். கடைசியாகப்பேசிய சசிகுமார்.
பாலா, அமீர், இருவருக்கும் எனது நன்றி. அவர்களது பலம் பலவீனம் இரண்டுமே எனக்குத் தெரியும். அவர்களை கேள்வி கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது. இரண்டுபேருமே படப்பிடிப்பை நிறுத்தி விட்டு இங்கே வந்திருகிறார்கள். அவர்களுக்கு என் நன்றி என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி