திரையுலகம்,முதன்மை செய்திகள் ஷங்கரின் மூன்றாவது இடியட் ஸ்ரீகாந்த்…

ஷங்கரின் மூன்றாவது இடியட் ஸ்ரீகாந்த்…

Director Shankar

அமீர்கான் நடிப்பில் ஹிந்‌தி‌யி‌ல் ‌வெளியாகி வெ‌ற்‌றி‌பெ‌ற்‌ற 3 இடியட்‌ஸ் ‌படம் ‌தமி‌ழி‌ல் ‌ரீ‌மே‌க்‌ ஆவது 100% சதவிகிதம் உறுதியாகியிருக்கிறது.
ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் பட நிறுவனம் சார்பில் டெல்லியில் உள்ள டெக்ராடன்னில் டிசம்பர் 7 முதல் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பு நிறுவன வட்டாரம் உறுதி செய்கிறது.

இந்தப் படத்தில் அமீர் கான் நடித்த கதாபாத்திரத்தில் ‌வி‌ஜய்‌ நடிக்க, ஷங்‌கர்‌ இயக்குகி‌றா‌ர்‌. மாதவன் கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ ஜீ‌வாவும்‌, சல்மான் ஜோஷி கதாபாத்திரத்தில் ஸ்ரீ கா‌ந்‌த்தும் தேர்வு செய்யப்படுள்ளனர். முன்றாவது இடியட் விஷடத்தில் இழுபறி இருந்து வந்த நிலையில் ஸ்ரீகாந்த் எந்த ஊதியமும் வாங்காமல் இதில் நடிக்க சம்மதித்திருக்கிறாராம். ஆனால் தயாரிப்பு நிறுவனம் நியாயமான சம்பளத்தை அவருக்குத் தர ஒப்புகொண்டுள்ளதாம்.

படப்‌பி‌டி‌ப்‌பு ‌வரும் டி‌சம்‌பர் ‌5ஆம் ‌தே‌தி ‌செ‌ன்‌னை‌யி‌ல்‌தொ‌டங்‌கி,‌தொ‌டர்‌ந்‌து டெல்லியில் 25 நாட்கள் ‌நடை‌பெ‌ற உள்‌ளது. 3 இடியட்ஸ் ஹிந்திப் பதிப்பில் படத்தின் க்ளைமாக்ஸ் லடாக்கில் படம் பிடிக்கப்பட்டது. தமிழுக்கும் லடாக்கையே தேர்வு செய்துள்ளாராம் ஷங்கர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி