ஹீரோயின்கள் சிலர் ஸ்லிம்மாக வேண்டும் என்று சாப்பிடாமல் இருப்பது, ஒவராக வேலை பார்த்து தொல்லைகள் தேடிக்கொள்வது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அந்த அவஸ்த்தையில் சிக்கியவர் வித்யா பாலன். கொல்கத்தாவில் சுஜாய் கோஷ் இயக்கும் படத்தில் பங்கேற்க ஷூட்டிங்கிற்கு வந்தபோதே டென்ஷனாக காணப்பட்டார் வித்யா. அவரிடம் காட்சியை விளக்கிவிட்டு டேக்குக்கு தயாரானார் இயக்குனர். நடித்துக்கொண்டிருந்த வித்யா பாலன் கண்ணிலிருந்து கண்ணீர்.
திடீரென கதறியபடி மயங்கி விழுந்தார். யூனிட்டுக்கு ஷாக். உடனடியாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டு, டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். மயக்கம் தெளிந்த வித்யா கூறும்போது, ‘நடித்துக்கொண்டிருந்தபோது திடீரென பயம் மனதை பற்றியது. மயங்கி விழுந்துவிட்டேன். பிறகு என்ன நடந்தது என்று தெரியாது. கடந்த 3 மாதமாக இடைவிடாமல் ஷூட்டிங், டப்பிங் என்று இரவு பகல் பாராமல் உழைத்ததே இதற்கு காரணம். இது எனக்கு அதிர்ச்சி அளித்தது. இடைவிடாத வேலையால் எனது வீடு, குடும்பத்தை ரொம்பவே பிரிந்து தவிப்பதும் காரணம்’ என்றார்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி