திரையுலகம் சல்மானுடன் ஜோடி சேர விரும்பாத அசின்

சல்மானுடன் ஜோடி சேர விரும்பாத அசின்

asin

மலையாள ‘பாடிகார்ட்’ பட ரீமேக்கை சல்மான் கானின் தங்கை அல்விரா தயாரிக்கிறார். இதில் சல்மான் ஜோடியாக நடிக்க அசின் மறுத்துள்ளார். ஏற்கனவே ‘லண்டன் ட்ரீம்ஸ்’ படத்தில் சல்மானுடன் நடித்தார். ‘ரெடி’ படத்திலும் அவருடன் நடித்து வருகிறார். அவருக்கு சல்மான் சிபாரிசு செய்வதாகவும் பாலிவுட்டில் கிசுகிசு பரவி உள்ளது.

இந்நிலையில் மீண்டும் சேர்ந்து நடிக்க சல்மான், அசின் இருவருமே விரும்பவில்லையாம். இதனால் ‘பாடிகார்ட்’ இந்தி ரீமேக்கில் நடிக்க சித்திக் கேட்டதும் அசின் மறுத்துவிட்டார். இது பற்றி அசின் கூறும்போது, ‘’ஏற்கனவே 2 படங்களில் சல்மானுடன் நடித்துவிட்டேன். ‘பாடிகார்ட்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் மட்டும் நடிக்கிறேன். நடிக்காத படத்தை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை” என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி