கயிறு சும்மாயிருந்தா பம்பரம் எதுக்கு சுத்தப்போவுது? ஆனால் சும்மாயில்லாத கயிறு கோடம்பாக்கத்தில் ஏகப்பட்ட பம்பரத்தை சுற்றலில் விட்டுக் கொண்டிருக்கிறதாம். சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய டைரக்டர் கவுதம் மேனன் அதை லண்டன் பங்கு சந்தையிலும் நுழைத்துவிட்டார்.
அந்த தைரியத்தில் முன்னுக்கு வர துடிக்கும் இயக்குனர்களான ஈரம் அறிவழகன், கற்றது தமிழ் ராம் இருவரையும் புக் பண்ணினார். ஆனால் அதோடு சரி. ஒரு இஞ்ச் கூட நகரவில்லையாம் வண்டி. இதற்கிடையில் குவாட்டர் கட்டிங் ஹீரோ சிவாவையும் அழைத்து நம்ம கம்பெனியில்தான் உங்களோட அடுத்த படம் என்று கூறிவிட்டார்.
அவ்வளவு பெரிய டைரக்டர் சொல்லும்போது எப்படியிருக்கும் சிவாவுக்கு? பெரிய கற்பனைகளோடு திரிந்து கொண்டிருக்கிறார். ஆனால் இந்த படங்களையெல்லாம் நல்லபடியாக எடுக்க வேண்டும் என்றால் லண்டன் பங்கு சந்தையில் கவுதம் வெளியிட்ட பங்குகள் லாபத்தோடு கைமாற வேண்டும். அப்புறம்தான் இங்கு கொடுத்த வாக்குகளுக்கு உயிர் வரும். அதுவரைக்கும்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி