இதர பிரிவுகள் ஒபாமா பாராட்டிய இந்தியர்…

ஒபாமா பாராட்டிய இந்தியர்…

ஒபாமா பாராட்டிய இந்தியர்… post thumbnail image

vishnu

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்குள் 2008ம் ஆண்டு 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அங்கு அறிவிப்பாளர் பணியில் இருந்தவர் விஷ்ணு ஷென்டே.

அவர் தாக்குதல் தொடங்கியவுடன் அங்கிருந்து ஓடிவிடாமல், தீவிரவாதிகளின் நடமாட்டததை தனது டவரி்ல் இருந்து கண்காணித்தபடி மக்களுக்கு பல அறிவுரைத் தந்தார்.

எந்த வழியாக தப்பியோடலாம் என்ற விவரத்தையும் ஒலிப்பெருக்கியில் தொடர்ந்து தந்து ஏராளமான உயிர்களைக் காப்பாறினார்.

மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த நேற்று தாஜ் ஹோட்டலில் ஒபாமா கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு இவரும் அழைக்கப்பட்டிருந்தார்.

நிகழ்ச்சியின் போது ஒபாமா, விஷ்ணு ஷென்டேவை தனதருகே அழைத்து அவருடன் கைகுலுக்கி, `மிகச் சிறந்த முறையில் செயல்பட்டு பலரைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்’ என்று பாராட்டினார்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி