அஜீத் ஒரு நடிகர் , ரேஸ் வீரர் என்பதுடன் ஒரு நல்ல சமையல்காரரும் கூட. சமீபத்தில் அஜீத்தின் சமையலை ருசித்து அனுபவித்திருக்கிறார்கள் மங்காத்தா யூனிட்டில் உள்ளவர்கள்.
இரு தினங்களுக்கு முன், திடீரென்று தனது மங்காத்தா யூனிட் ஆட்களுக்கு பிரியாணி விருந்து தந்து அசத்தியுள்ளார் அஜீத். அந்த பிரியாணியை அவரே தயார் செய்ததோடு, தன் கையாலேயே அனைவருக்கும் பரிமாறினாராம்.
இதுகுறித்து தனது பேஸ்புக்கில் இப்படிக்குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு:
“எல்லாரும் தலப்பாக்கட்டு பிரியாணி கேள்விப்பட்டிருப்பீங்க… ஆனா தல பிரியாணி கேள்விப்பட்டிருக்கீங்களா…?? இன்னிக்கு இரவு அதை அனுபவிச்சு சாப்பிட்டோம். மங்காத்தா டீமுக்கே பிரியாணி சமைச்சுக் கொடுத்தார் தல அஜீத்”!, என்று கூறியுள்ளார்.
பிரியாணி பரிமாறும்போதே, மறக்காம எல்லாரும் டேஸ்ட் எப்படி இருக்குன்னு சொல்லுங்க என்று கேட்டுக் கொண்டாராம் அஜீத்.
அஜீத்தின் சகோதரரும் ஒரு பிரபலமான சமையல் கலைஞர் . பெசன்ட் நகரில் இவரது ஹோட்டல் ரொம்பவே பிரபலம்!
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி