திரையுலகம் தீபாவளிக்கு 5 படங்கள் தான்

தீபாவளிக்கு 5 படங்கள் தான்

chennaiboxoffice

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 5 படங்கள் மட்டுமே ரீலிஸ் ஆகின்றன. தியேட்டர்கள் கிடைக்காததால் ரீலிசுக்கு தயாராக இருக்கும் 20 சிறிய பட்ஜெட் படங்களை ரீலிஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

திபாவளி தினத்தில் தனுஷ், ஜெனிலியா நடிப்பில் உருவாகியிருக்கும் “உத்தமபுத்திரன், பிரபுசாலமன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்துள்ள “மைனா, அர்ஜுன், ஹரிப்பிரியா நடித்துள்ள “வல்லக்கோட்டை, புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள “வ-குவாட்டர் கட்டிங் ஆகிய படங்கள் ரிலீசாகின்றன. இவைகளைத் தவிர “ஸ்டிரீட் டான்ஸ் என்ற முப்பரிமாண ஆங்கிலப் படத்தின் தமிழாக்கமும் வெளியாகிறது.

தீபாவளி ரீலிஸ் படங்களில் அதிக அளவில் பிஸினஸ் ஆகியிருப்பது உத்தமபுத்திரன்தான். கிட்டத்தட்ட 600 தியேட்டர்களி்ல ரீலிஸ் செய்யப்படும் இப்படம் தெலுங்கு படமான ரெடி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

“மைனா படத்தைத் திரையிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. பிரபுசாலமன் இயக்கியுள்ள இப்படத்தில் புதுமுகம் விதார்த், சிந்து சமவெளி அமலா பால் ஆகியோர் நடித்துள்ளனர். 170 தியேட்டர்களில் இந்தப் படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.

“வ-குவாட்9டர் கட்டிங் படத்தை தயாநிதி அழகிரி விநியோகம் செய்கிறார். ஒய் நாட் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், புஷ்கர் – காயத்ரி தம்பதி இந்தப் படத்தை இயக்கியுள்ளனர். மிர்ச்சி சிவா, லேகா வாஷிங்டன் நடித்துள்ள இப்படம் 150 தியேட்டர்களில் இந்தப் படம் திரையிடப்படுகிறது.

அங்காடித்தெரு படத்தில் கருங்காலி சூப்பர்வைசராக நடித்த டைரக்டர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் வல்லகோட்டை. அர்ஜுன், ஹரிப்பிரியா நடித்துள்ள இப்படம் 180 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.

முன்பெல்லாம் தீபாவளி தினத்தில் 10 முதல் 15 படங்கள் வரை ரீலிஸ் ஆகும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி, பொங்கல் ரீலிஸ்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த ஆண்டு கூட அரசியல் பின்னணி மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் போட்டியில் இருப்பதால் படப்பிடிப்பு முடிந்து ரீலிசுக்கு தயாராக இருக்கும் சுமார் 20க்கும் மேற்பட்ட சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி