கடந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அமிதாப்பசனுக்கும், சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் உள்பட 3 தேசிய விருதுகள் ‘பசங்க’ படத்துக்கும் நேற்று வழங்கப்பட்டது.
57ம் ஆண்டு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த விருதுகளை ஜனாதிபதி பிரதிபா பட்டீல் வழங்கினார். விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு:
‘பா’ இந்தி படத்தில் நடித்தமைக்காக அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டது. இது அமிதாப்பச்சன் பெறும் 4வது தேசிய விருது. விழாவுக்கு மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய், மகள் ஸ்வேதா, மருமகன் ராகுல் நந்தா ஆகியோர் வந்திருந்தனர்.
உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை தயாரிப்பாளர் டி.ராம நாயுடு பெற்றார். வங்காளத்தை சேர்ந்த அனன்யா (அபோகோமான்) சிறந்த நடிகை விருது பெற்றார்.
சிறந்த தமிழ்ப்படம் ‘பசங்க’ (தயாரிப்பாளர் சசிகுமார்), சிறந்த வசனம் (டைரக்டர் பாண்டிராஜ்), சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் ஸ்ரீராம், டி.எஸ்.கிஷோர் என 3 விருதுகளை ‘பசங்க’ படம் தட்டிச் சென்றது.
சிறந்த ஒலிப்பதிவு ரசூல் பூக்குட்டி (பழசிராஜா). சிறந்த இசை அமைப்பாளர் அதித் திரிவேதி (தேன் டி). சிறந்த நடன இயக்குனர் கே.சிவசங்கர் (மகதீரா). சிறந்த பொழுது போக்கு படம் ஆமிர்கான் நடித்த ‘3 இடியட்ஸ்’. தேசிய அளவில் சிறந்த படமாக மம்முட்டி நடித்த ‘குட்டி ஸ்ரங்க்’ தேர்வு பெற்றது. அதற்கு தங்கத் தாமரை விருதும், ரூ2.5 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த திரைக்கதை, சிறந்த ஆடை வடிவமைப்பு ஆகியவற்றுக்காக ஜூரி விருதுகளையும் இப்படம் பெற்றது
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி