திரையுலகம் ஷங்கரின் அழைப்பை ஏற்க மறுத்தார் மாதவன்

ஷங்கரின் அழைப்பை ஏற்க மறுத்தார் மாதவன்

Director_Shankar

இந்தியில் வெளிவந்த 3 இடியட்ஸ் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் ஷங்கர். இதில் விஜய், ஜீவா இருவரும் நடிப்பார்கள் என்று தெரிகிறது. இந்திப்படத்தில் நடித்த வேடத்திலேயே மீண்டும் நடிக்க மாதவனை நடிக்க ஷங்கர் அழைத்தார். ஆனால் மாதவனோ ஏற்கெனவே நடித்த வேடத்தில் நடிப்பதற்கு விருப்பம் இல்லை என்று ஷங்கரின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

இப்போது மாதவன் நடித்துக்கொண்ருக்கும் மூன்று படங்களுமே இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்கள்தான். மன்மதன் அம்பு படத்தில் கமலஹாசனோடு நடிக்கிறார். அதிர்ஷ்டசாலி படத்தில் விக்ரமோடு இணைந்து நடிக்கிறார் . வேட்டை படத்தில் ஆர்யாவுடன் நடிக்கிறார். இனிமேல் தனித்து நடிக்கவே விரும்புகிறாராம் மாதவன். இரண்டு, மூனறு ஹீரோக்களில் ஒருவராக நடிக்க அவருக்கு விருப்பம் இல்லையாம். அதனால்தான் ஷங்கர் நடிக்க அழைத்தும் மறுத்துவிட்டாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி