எந்திரன் படம் வெளியாகி இது மூன்றாவது வாரம். தமிழகத்தின் பெரும்பான்மை திரையரங்குகளில் இந்தப் படமே இன்னும் ஓடிக் கொண்டுள்ளது. பெரும்பாலான திரையரங்குகள் தாங்கள் கொடுத்த மினிமம் கியாரண்டி தொகைக்கும் மேலேயே சம்பாதித்து விட்டனர்.
இப்போது வருவதெல்லாம் லாபம்தான் அவர்களுக்கு. வரும் 22-ம் தேதி வரை வேறு புதிய படங்களை வெளியிடுவதில்லை என்று முதலில் விநியோகஸ்தர்கள் தீர்மானித்திருந்தனர்.
ஆனால், ரிலீசுக்குத் தயாராக இருந்த சிறிய படங்களின் தயாரிப்பாளர்களின் தொல்லை பொறுக்காமல், கடந்த 15-ம் தேதி 6 படங்களை வெளியிட்டனர். ஒச்சாயி, தொட்டுப்பார் என சில படங்கள் வெளியாகின. இந்த இரு படங்களைத் தவிர வேறு படங்களின் பெயர்கள் கூட மக்களுக்கு தெரியவில்லை.
இன்றைய தேதிக்கு இந்தப் படங்கள் வெளியானதும் தெரியவில்லை, தியேட்டரை விட்டுப் போனதும் தெரியவில்லை. ஒச்சாயி, தொட்டுப்பார் மட்டும் ஓரளவு தாக்குப்பிடிப்பதாகத் தெரிகிறது.
இப்போதைக்கு ரஜினியின் எந்திரன் படம் மட்டுமே தொடர்ந்து திருப்தியான அளவு பார்வையாளர்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலை தீபாவளிக்குப் பிறகும் தொடரும் என்றே தெரிகிறது என்கிறார் திரையரங்க உரிமையாளர் ஒருவர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி