ஆந்திர மாநிலம் சீராலா கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பாராவ் -மாதவி தம்பதியரின் மகன் யஷ்வந்த். இவன் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான்.இவனுக்கு பிறந்தது முதலே ரத்த கொதிப்பு(பிபி), வாந்தி, தலைவலி, மூக்கில் ரத்தம் வடிதல் உள்ளிட்ட ரத்தம் சம்பந்தப்பட்ட ஏராளமான நோய்கள் இருந்துள்ளது. ஆந்திர அரசின் காப்பீட்டுத் திட்டமான ஆரோக்கியஸ்ரீ திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்று வந்த யஷ்வந்த்தின் சிகிச்சைக்கு நிறைய பணம் தேவைப்பட்டது. அதனால் ஆந்திராவிலுள்ள தனியார் மருத்துவமனைகள் யஷ்வந்த்திற்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டன. இந்நிலையில் தமிழகம் வந்த யஷ்வந்தின் பெற்றோர் திரைப்பட நடன இயக்குனர் லாரன்சின் தொண்டு நிறுவனம் குறித்து கேள்விப்பட்டனர். அதன் மூலம் யஷ்வந்தின் சிகிச்சைக்கு முயற்சி செய்தனர். யஷ்வந்த் குறித்து கேள்விப்பட்ட லாரன்சிற்கு உடனே இளைய தளபதி விஜய்யின் நினைவு வர, அவர் விஜய்யை அனுகி விஷயத்தை தெரிவித்துள்ளார். உடனே விஜய் தனது தங்கை வித்யாவின் நினைவாக நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தின் மூலம் யஷ்வந்திற்கு உதவி செய்ய முடிவு செய்தார். மேலும் யஷ்வந்தின் ஆபரேஷனுக்கு எவ்வளவு பணம் செலவானாலும் சரி, அதனை தானே தருவதாக விஜய் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யஷ்வந்திற்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆபரேஷன் வெற்றி அடைந்து மறுபிறவி பெற்றார் யஷ்வந்த். குணமான யஷ்வந்த்தும் அவனது பெற்றோரும், புஷ்பா கார்டனில் காவலன் பட சூட்டிங்கில் இருந்த விஜய்யையும், லாரன்சையும் நேரில் சந்தித்து, கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். அவர்களுக்கு விஜய்யும், லாரன்சும் ஆறுதலும், நம்பிக்கையும் கூறினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி