சீனத்தைச் சேர்ந்த ஜாக்கி சான் அமெரிக்கர்களின் ஹீரோவானார்… அமெரிக்க நடிகர்களோ ஐரோப்பியர்களின் விருப்ப நாயகர்களானார்கள்.
ஆனால் இந்தியாவில் பிறந்த ரஜினி கீழை நாடுகள் எனப்படும் சீனா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளின் மக்களை கவர்ந்துள்ளார்!”
-இப்படிப் போகிறது சைனா டெய்லி எனும் சீனத்து நாளிதழின் சிறப்புக் கட்டுரை ஒன்று.
முதன் முதலில் சீனர்களுக்கு ரஜினி அறிமுகமானது முத்து பட டிவிடிக்கள் வடிவில்தான். அதன்பிறகு அவரது படங்களை விரும்பிப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர் சீனர்கள். சிவாஜி திரைப்படம் சீன சப் டைட்டிலுடன் வெளியானது.
இப்போது எந்திரன் பெரிய அளவில் சீனாவில் வெளியாகியுள்ளதாகவும் இந்தியர்கள் மட்டுமின்றி, சீனர்களும் ஆர்வத்துடன் எந்திரனைக் காண வருவதாகவும் சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி