அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் நரேந்திர மோடியின் செல்வாக்கு தேர்தலுக்கு பின் சரிந்துள்ளது: கருத்து கணிப்பில் தகவல்!…

நரேந்திர மோடியின் செல்வாக்கு தேர்தலுக்கு பின் சரிந்துள்ளது: கருத்து கணிப்பில் தகவல்!…

நரேந்திர மோடியின் செல்வாக்கு தேர்தலுக்கு பின் சரிந்துள்ளது: கருத்து கணிப்பில் தகவல்!… post thumbnail image
புதுடெல்லி:-கடந்த ஆண்டு நடந்த தேர்தலின் போது நாடு முழுவதும் மோடி அலை வீசியது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம் தவிர அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று அசுர பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் (300 நாட்கள்) நிறைவடைந்து விட்ட நிலையில் மோடியின் செல்வாக்கு எப்படி? அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளது? என்பது குறித்து ‘‘இந்தியா டூடே’’ ஆங்கில வார இதழ் கருத்து கணிப்பு நடத்தியது. அதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதில் 300 நாள் ஆட்சியில் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கருத்து கணிப்பு நடத்திய போது மோடியின் செயல்பாடு பிரமாதம் என்று 11 சதவீதம் பேர் தெரிவித்து இருந்தனர். தற்போது 22 சதவீதம் பேர் பிரமாதம் என்று தெரிவித்து உள்ளனர்.அதே போல் சிறப்பான ஆட்சி என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 51 சதவீதம் பேர் கூறியிருந்தனர். தற்போது அது 38 சதவீதமாக குறைந்துள்ளது.சராசரியாக உள்ளது என்று முன்பு 28 சதவீதம் பேர் தெரிவித்து இருந்தனர். இப்போது அது 26 சதவீதமாக குறைந்துள்ளது.மிகவும் மோசம் என்று ஆகஸ்ட் மாதம் 6 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். தற்போது மிகவும் மோசம் என்று 11 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
இதே போல் கடந்த 6 மாதத்தில் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளதா? என்று கேட்ட போது அதுவும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 1 சதவீதம் பேர் குறைந்து இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

இப்போதைய சூழ்நிலையில் பாராளு மன்ற தேர்தல் நடத்தினால் பா.ஜனதாவுக்கு ஏற்கனவே கிடைத்த தொகுதிகளை விட 27 தொகுதிகள் குறையும். அதே சமயம் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் கூடுதல் கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.மோடி அரசில் பாதுகாப்பாக உணர்கிறீர்களா? என்று கேட்கப்பட்டதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 78 சதவீதம் பேர் ஆம் என்று தெரிவித்தனர். தற்போது அது 61 சதவீதமாக குறைந்துள்ளது.பாதுகாப்பு இல்லை என்று ஏற்கனவே 19 சதவீதம் பேர் தெரிவித்து இருந்தனர். அது 26 சதவீதமாக அதிகரித்து உள்ளது.வளர்ச்சி திட்டம் தொடர்பாக முன்பு 70 சதவீதம் ஆதரவு இருந்தது. இப்போது 47 சதவீதமாக குறைந்துள்ளது.

மதரீதியான விமர்சனங்கள் முன்பு 21 சதவீதமாக இருந்தது. இப்போது 39 சதவீதமாக அதிகரித்துள்ளது.சிறந்த முதல்வர் யார்? என்று கேள்விக்கு நாடு முழுவதும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 17 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். டெல்லியில் மட்டும் 56 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.நவீன் பட்நாயக்குக்கு நாடு முழுவதும் 5 சதவீதம் பேரும், சொந்த மாநிலத்தில் 69 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மதரீதியான விமர்சனங்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலையீடு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை பெரிய பிரச்சினையாக பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். இதுதான் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிவுக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி