செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் 132 பேருடன் சென்ற ரஷ்ய மீன்பிடி கப்பல் மூழ்கியதில் 54 பேர் பலி!…

132 பேருடன் சென்ற ரஷ்ய மீன்பிடி கப்பல் மூழ்கியதில் 54 பேர் பலி!…

132 பேருடன் சென்ற ரஷ்ய மீன்பிடி கப்பல் மூழ்கியதில் 54 பேர் பலி!… post thumbnail image
மாஸ்கோ:-ரஷ்யாவை சேர்ந்த குளிர்சாதன வசதியுடன் கூடிய மீன்பிடி கப்பல் மூழ்கியதில் அதில் பணியாற்றிய 132 பேரில் 54-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காம்சட்கா தீபகற்பத்தின் ஓகோட்ஸ்க் கடல் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. இதுவரை மீட்பு குழுவினரால் 63 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

15 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் மீன் பிடிப்பதில் ஈடுபட்டிருந்த 25 படகுகளும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று நள்ளிரவு நடந்த மீன்பிடி கப்பல் விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. கடலில் மிதந்து செல்லும் பனிப்பாறைகளில் கப்பல் மோதியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி கப்பலில் பணியாற்றியவர்களில் பெரும்பாலானவர்கள் லாட்வியா, உக்ரைன், மியான்மர், வனுவாடு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி