செய்திகள்,திரையுலகம் ரொம்ப நல்லவன்டா நீ (2015) திரை விமர்சனம்…

ரொம்ப நல்லவன்டா நீ (2015) திரை விமர்சனம்…

ரொம்ப நல்லவன்டா நீ (2015) திரை விமர்சனம்… post thumbnail image
சென்னையில் மின்சார வாரியத்தில் வேலை செய்து வருகிறார் நாயகன் செந்தில். இவர் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். இவருடைய மாமா பெண்ணான சுருதி பாலாவை காதலித்து வருகிறார். ஒருநாள் செந்தில் வேலை செய்யும் இடத்தில் அவருடைய மேலதிகாரி செந்திலை தொந்தரவு செய்கிறார். பின்னர் கடன்காரன் ஜான் விஜய் செந்திலிடம் வட்டியை கேட்டு தொந்தரவு செய்கிறார். இதையடுத்து மாமா பெண்ணான சுருதி பாலாவுடன் பீச்சிற்கு செல்கிறார் செந்தில். அங்கு ரவுடியான கனல் கண்ணன் தன் ஆட்களுடன் வந்து சுருதி பாலாவிடம் சில்மிஷம் செய்கிறார். இதனால் கோபமடையும் செந்தில், ரவுடிகளை அடித்து அவர்களை போட்டோ எடுத்து போலீஸ் நிலையத்திற்கு செல்கிறார். அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டரான இமான் அண்ணாச்சி, இதெல்லாம் ஒரு விஷயமாக என்று கூறி புகாரை ஏற்க மறுக்கிறார்.

இதனால் இமான் அண்ணாச்சியை போட்டோ எடுத்து, ‘நான் மின்சார வாரியத்தில் வேலை செய்யும் அரசு ஊழியர் என்று கூறி, இமான் அண்ணாச்சி மீதும் வழக்கை பதிவு செய்ய சொல்கிறார். இந்த பிரச்சனையை ஏரியா கவுன்சிலரான சோனாவிற்கு செல்கிறது. சோனாவோ செந்திலை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். அதுவும் நடக்காமல் போக, சோனா மீதும் வழக்கை பதிவு செய்ய சொல்கிறார் செந்தில்.பின்னர் இந்த விஷயம் அந்த ஏரியாவின் பெரிய ஆளான வெங்கடேஷிடம் போகிறது. அவர் வந்து இந்த பிரச்சனையை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். அதுவும் பலனலிக்காமல் போக இவர்களுக்கு கைகலப்பு ஏற்படுகிறது. இவர்கள் எல்லோரும் கூட்டாக சேர்ந்து செந்திலை ஒருநாள் போலீஸ் நிலையத்தில் அடைத்து விடுகிறார்கள்.மறுநாள் போலீஸ் காவலில் இருந்து மன வருத்தத்துடன் வெளியே வரும் செந்தில், நேராக தற்கொலை செய்து கொள்ள செல்கிறார். செல்லும் வழியில் சர்வஜித்தை சந்திக்கிறார். அவரிடம் நடந்ததை எல்லாம் விவரித்து விட்டு கோபத்துடன் ஆறு பேரை கொல்ல வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு சர்வஜித் நான் இந்த ஆறு பேரை கொலை செய்கிறேன் என்று கூற, அதற்கு செந்தில் கொலை செய்வதற்கு ரூ. 60,000 பணம் தருவதாகவும் கூறுகிறார். அதற்கு முன் பணமாக ரூ.12 கொடுக்கிறார்.

இந்த ஆறு பேரில் வரிசைப்படி யாரை முதலில் கொல்ல வேண்டும் என்று சீட் குலுக்கி போடுகிறார்கள். அதன்படி முதலில் மின்சார அதிகாரி, வட்டி வசூலிக்கும் ஜான்விஜய், போலீஸ் அண்ணாச்சி, கனல் கண்ணன், சோனா, கடைசியாக அரசியல் பிரமுகர் வெங்கடேஷ் என்று பட்டியலிடுகின்றனர். இவர்களை திங்கள் முதல் சனி கிழமை வரை இரவு 12 மணிக்குள் கொலை செய்கிறேன் என்று சர்வஜித் கூறுகிறார்.மறுநாள் தொடங்கியதும் வேலைக்கு லீவு சொல்வதற்காக செந்தில் தன் அலுவலகத்திற்கு போன் செய்கிறார். அப்போது மேலதிகாரி கொலை செய்யப்பட்டது செந்திலுக்கு தெரியவருகிறது. இதனால் அதிர்ந்து போகும் செந்தில் சர்வஜித்தான் கொலை செய்திருப்பார் என்று நினைத்து அடுத்த கொலை நடப்பதற்கு அதை தடுக்க முயற்சி செய்கிறார். ஆனால் அதற்குள் அடுத்த கொலையும் நடந்து விடுகிறது.இரண்டு கொலைகள் நடந்த நிலையில், மீதமுள்ள நான்கு கொலைகளையும் செந்தில் தடுத்தாரா? செந்தில் என்ன ஆனார்? என்பதை திரில்லரோடு நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் செந்தில், முந்தைய படங்களை விட இப்படத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார். கொலை செய்வதற்கான கோபமும், அதை தடுப்பதற்கான பரிதவிப்பும் என நடிப்பில் பளிச்சிடுகிறார். நாயகியாக நடித்திருக்கும் சுருதி பாலா அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ரோபோ சங்கரின் காமெடி இப்படத்தில் வரவேற்பு பெற்றிருக்கிறது. பல இடங்களில் கைத்தட்டல் பெறுகிறார். இமான் அண்ணாச்சி, கனல் கண்ணன், சோனா, வெங்கடேஷ், சர்வஜித் ஆகியோர் அவர்களுக்கே உரிய பாணியில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.அப்பாவியான இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளையும் அதன் பின்னணியில் ஏற்படும் விஷயங்களையும் கதை கருவாக வைத்து இயக்கியிருக்கிறார் வெங்கடேஷ். கதாபாத்திரங்களை அருமையாக வேலை வாங்கியிருக்கிறார்.ராம்சுரேந்தர் இசையில் கானா பாலா பாடியுள்ள பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். மனோகரின் ஒளிப்பதிவை ரசிக்கலாம்.

மொத்தத்தில் ‘ரொம்ப நல்லவன்டா நீ’ புதுமை………….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி