செய்திகள்,திரையுலகம் ‘தல’ அஜித்திடம் சான்ஸ் கேட்ட நடிகர் ஆர்யா!…

‘தல’ அஜித்திடம் சான்ஸ் கேட்ட நடிகர் ஆர்யா!…

‘தல’ அஜித்திடம் சான்ஸ் கேட்ட நடிகர் ஆர்யா!… post thumbnail image
சென்னை:-சிவா மனசுல சக்தி, வா, ஒரு கல் ஒரு கண்ணாடி உள்பட பல சிவா மனசுல சக்தி, வா, ஒரு கல் ஒரு கண்ணாடி உள்பட பல படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பவர் நடிகர் ஆர்யா. முக்கியமாக தனது நட்பு வட்டார நடிகர்கள் யார் கெஸ்ட் ரோலில் நடிக்க அழைத்தாலும் பணமே வாங்காமல் நடித்து தரக்கூடியவர் ஆர்யா. அந்த வகையில், விஷ்ணுவர்தன் இயக்கிய ஆரம்பம் படத்தில் அஜீத்துடன் இணைந்து செகண்ட் ஹீரோவாக நடித்தார். அது சிறிய ரோல் என்றாலும் பேசப்பட்டது.

அதனால், மீண்டும் அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஆர்யாவுக்கு ஏற்பட்டுள்ளதாம். மேலும், தனது ஆசையை உடனே சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லி விடும் பழக்கமும் கொண்ட ஆர்யா, என்னை அறிந்தால் சமயத்தில் ஒருநாள் ஏதேச்சையாக அஜீத்தை சந்தித்தபோது மீண்டும் உங்கள் படத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்று தனது விருப்பத்தை ஓப்பன் பண்ணினாராம் ஆர்யா. அதற்கு, அதை நான் முடிவு செய்ய முடியாது.கதைதான் முடிவு செய்ய வேண்டும். நேரம் வரும்போது கண்டிப்பாக சேர்ந்து நடிப்போம் எனறு ஆர்யாவுக்கு தனது பாணியிலேயே பதில் கொடுத்தாராம் அஜீத்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி