செய்திகள்,திரையுலகம் ‘என்னை அறிந்தால்’ படம் வெற்றியா? தோல்வியா? – முழு விவரம்!…

‘என்னை அறிந்தால்’ படம் வெற்றியா? தோல்வியா? – முழு விவரம்!…

‘என்னை அறிந்தால்’ படம் வெற்றியா? தோல்வியா?  – முழு விவரம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், முதல் வார பாக்ஸ் ஆபிஸில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. இப்படம் சமீபத்தில் ரூ 100 கோடியை தாண்டியதாக இந்தியாவின் பிரபல ஆங்கில பத்திரிக்கை தெரிவித்தது. ஆனால், தற்போது தமிழகத்தின் பிரபல பத்திரிக்கை ஒன்று இப்படம் ரூ 70 கோடியை தான் எட்டியது மேலும் சில இடங்களின் படம் நஷ்டம் தான் என கூறியுள்ளது.

படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ 60 கோடி படம் வசூல் செய்ய, கண்டிப்பாக இப்படம் இந்நேரம் ரூ 100 கோடியை எட்டியிருக்கும், ஆகவே படம் வெற்றி தான் என சிலர் கூறினாலும், தயாரிப்பாளர் தரப்பு வழக்கம் போல் மௌனம் சாதித்து வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி