செய்திகள்,திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் பழம்பெரும் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஏ.வின்சென்ட் மரணம்!…

பழம்பெரும் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஏ.வின்சென்ட் மரணம்!…

பழம்பெரும் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஏ.வின்சென்ட் மரணம்!… post thumbnail image
சென்னை:-பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஏ.வின்சென்ட் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 83. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஏ.வின்சென்ட், இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். வின்சென்ட் உடல் சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோட்டில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை சாந்தோமில் அடக்கம் செய்யப்படுகிறது.

ஏ.வின்சென்ட், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். மலையாளத்தில் பல படங்களையும், தமிழில் ‘நாம் பிறந்த மண்’, ‘திருமாங்கல்யம்’ உள்ளிட்ட சில படங்களை இயக்கியும் உள்ளார்.
தமிழில் ‘வசந்தமாளிகை’, ‘சவாலே சமாளி’, ‘அடிமைப்பெண்’, ‘எங்க வீட்டு பிள்ளை’ உள்ளிட்ட சூப்பர், டூப்பர் ஹிட்டான படங்களில் இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

1963ம் ஆண்டு தமிழில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் இடம்பெற்ற ‘சொன்னது நீதானா’ பாடலை மருத்துவமனையின் சிறிய அறைக்குள்ளேயே அற்புதமாக ஒளிப்பதிவு செய்தவர் வின்சென்ட். அந்த சிறிய அறைக்குள் அத்தனை விதமான ஆங்கிளில் படம்பிடித்து சாதனை படைத்தவர். ஏ.வின்சென்ட்டின் மறைவு தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி